எனக்கு சோறுதான் எல்லாமே! - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி | Chef Damu in Aval Kitchen YUMMY AWARDS 2018 - Aval Vikatan | அவள் விகடன்

எனக்கு சோறுதான் எல்லாமே! - டாக்டர் செஃப் தாமு - நடிகை தீபா சிரிப்பொலி

அவள் விகடன் கிச்சன் யம்மி விருதுகள்கானப்பிரியா - படங்கள் : விகடன் போட்டோ டீம்

மிழகம் முழுவதிலுமிருந்து சிறந்த உணவு வகைகளை வழங்கி, மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருபவர்களைத் தேடிப் பிடித்து ‘யம்மி விருதுகள்’ அளித்து, தன் முதல் தடத்தைப் பதித்திருக்கிறது ‘அவள் விகடன் கிச்சன்’.

அழகிய மாலைப்பொழுதில், உற்சாகமாக அணிவகுத்து வந்த விருந்தினர்களுக்கு, பானகம், நெல்லிக்காய் மசாலா மோருடன் வரவேற்பு தந்தது யம்மி விழா. அந்தப் பதினைந்து விருதுகளில் ‘நம்ம ஃபேவரைட் ஹோட்டல் வருமா?’ என்பதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்சமாம் மற்றும் ஆனந்தின் ரேப் இசை, ஸ்டான்ட்அப் காமெடியன் பார்கவ்வின் நகைச்சுவைச் சரம், `அருண் தி மென்டலிஸ்ட் ஷோ' என வித்தியாச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விஜேவும் நடிகையுமான ரம்யா தொகுத்து வழங்க விருது விழா களைகட்டியது.

செட்டிநாடு சிக்கன் முதல் மதுரை ஜிகர்தண்டா வரை எண்ணிலடங்கா பிரத்யேக உணவு வகைகள் தமிழ்நாட்டில் உள்ளன. என்னதான் பீட்சா, பர்கர் என அப்டேட் ஆனாலும், நம்ம ஊரு பிரியாணி போல வருமா? அப்படி என்றைக்குமே பிரியாணி உலகில் தனித்து நிற்கும் திண்டுக்கல் வேணு பிரியாணிக்குத்தான், ‘சிறந்த பிரியாணி’ விருது அளித்துப் பெருமைப்பட்டது அவள் விகடன் கிச்சன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick