அவள் விகடன் - ஸ்ரீ போஸ்ட்

திர்காலச் சந்ததியரைப் பன்முகச் சிறப்போடு, எதையும் எதிர்கொள்ள துணிவோடு, துடிப்போடு வளர்க்க வேண்டிய விவேக கருத்தை `நமக்குள்ளே' நல்முத்தாக விதைத்தது.


- எஸ்.மகாலெட்சுமி, காரைக்கால்;
ராஜி குருசாமி, சென்னை-88;
கே.எஸ்.கோவர்த்தனன், ஸ்ரீரங்கம்


பிரபலங்களுக்கும் அவர்களின் மனைவி களுக்குமான அன்புப் பாலத்தை ஸ்பெஷலாக உணர்த்தியிருந்ததை ரசித்தோம்.

- எஸ்.லட்சுமி சுந்தரம், நெல்லை-7;
மயிலை கோபி, சென்னை-83


லைஞர் மு.கருணாநிதி பற்றிய தகவல்களைப் பதிவிட்டது அருமை. இட ஒதுக்கீட்டுக்காக அவர் போராடியதை நினைவூட்டியது ஹைலைட்.

- எஸ்.வி.எஸ்.மணியன், கோவை-12;

ரேவதி சம்பத்குமார், ஈரோடு; அ.சம்பத், திருவரங்கம்மெனுராணி செல்லம், சமையலை விருப்பமுடன் செய்வதில் உள்ள நன்மை களைப் பட்டியலிட்டது பாராட்டத்தக்கது.

- என்.காளிதாஸ், சிதம்பரம்;
கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்


‘அஞ்சறைப் பெட்டி’ பகுதியில் டாக்டர் விக்ரம் குமாரின் `மஞ்சள் மகத்துவம்', நம் நலம்காக்கும் நல்மருந்து.

- எஸ். வளர்மதி, கொட்டாரம்;
அ. பவானி, வயலூர்


‘ஹெல்த்தி ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்’ இணைப்பு நொறுக்குத் தீனி பிரியர்களின் ரசனைக்கேற்றபடி அமைந்தது.

- மேகலா மாணிக்கம், சென்னை-78;
ஜி.லட்சுமி வாசுதேவன், சென்னை-41


சென்னையின் முதல் பெண் ஷெரீஃப் மேரி கிளப்வாலா ஜாதவ்வின் இனிய வரலாறு, பெண்ணுலகைப் பெருமைப்பட வைத்திருந்தது.

- மோனிஷா பிரியங்கா, திருச்சி-18;
உஷா சுதர்சன், திருச்செங்கோடு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick