பட்டி | Patti divine human gods stories - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/09/2018)

பட்டி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தெய்வ மனுஷிகள்

ட்டிக்கு ஏழு அண்ணங்காரனுங்க. ஏழு பேரும் அந்தூரு ஜமீனுக்கு, சுத்துப்போட்டு காவலாளு வேலை செய்யறவனுங்க. பட்டிக்குக் காலு கொஞ்சம் ஊனம். பெறப்புலயே ஆன கொறை அது. அதனால குடும்பத்துல எல்லாரும் பட்டியைத் தெய்வப் பெறப்பா வளர்த்தாக. குறிப்பா, அண்ணங்காரனுங்க தங்கச்சியை ‘தாங்கு தாங்கு’ன்னு தாங்குனானுங்க. எல்லாம் இருந்தும், ‘பொண்ணு காலுத்தாங்கி நடக்குறாள்’னு வந்த சம்பந்தமெல்லாம் வாசலோட போயிருச்சு.

இந்த நேரத்துலதான், நெசவு செய்யற அண்ணனும் தம்பியும் அந்தூருக்கு குடிவந்தானுவ. அண்ணன் பெரிய அவினாசி. தம்பி சின்ன அவினாசி. ஒருக்கா, ரெண்டு பேரும் தலைச்சுமையா பட்டுச் சேலைகளைச் சுமந்துக்கிட்டு வீதிவீதியா வித்துக்கிட்டு வந்தானுவ. ‘புடிச்ச சேலையை வாங்கிக்க புள்ளே’னு சொன்னான் பட்டியின் அப்பங்காரன். சின்ன அவினாசி, பட்டியைப் பார்த்தவுடனே மயங்கிட்டான். ‘கட்டுனா இவளத்தான் கட்டணும்’னு அப்பவே முடிவு பண்ணிட்டான். யாவாரம் முடிஞ்சு வீட்டுக்குப்போன அவினாசிக்கு, பட்டி நினைப்பாவே இருந்துச்சு. ‘அடேய் தம்பி... அவளுக்கு காலு பாதகமா இருக்கே... கவனிச்சியா’ன்னு கேட்டான் பெரியவன். ‘அதெல்லாம் பாத்தாச்சு... அவளுக்குக் காலா நான் இருப்பேன்... அவளைத்தான் கட்டிக்கு வேன்’னு உறுதியா நின்னான் சின்னவன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க