இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர் - தென்னிந்திய தணிக்கையாளர் - கவுன்சிலின் முதல் பெண் தலைவர் - ஆர்.சிவபோகம் அம்மாள்

முதல் பெண்கள்

1930 -ம் ஆண்டு... வேலூர் சிறை யிலிருந்து வெளியே வருகிறார் பெண் ஒருவர். மனமெல்லாம் கலக்கம். அவரது ஓராண்டு வாழ்க்கையைச் சிறைக் கம்பிகள் தின்றுவிட்டன. இருபத்து மூன்றே வயதான அந்தப் பெண் செய்வதறியாது தன் சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தளிப்பரம்பாவுக்கு ரயில் ஏறுகிறார். ஊரில் வந்த வரன் எல்லாம் அவர் சிறை சென்றதையே காரணம் காட்டி மறுத்தனர். மாற்றுத் திறனாளி வேறு. கேட்கவும் வேண்டுமா? திருமணக் கனவை மூட்டைக் கட்டி ஓர் ஓரமாக வைத்துவிட்டு, சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார் அந்தப் பெண். சிறையில் படித்த விவேகானந்தரின் புத்தகம் ஒன்றின் வசனம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது - `உன் மீது நம்பிக்கை வை!'

நம்பிக்கை அவரைக் கைவிடவில்லை. சிறை சென்ற அந்தப் பெண்தான் இந்தியாவின் முதல் பெண் ஆடிட்டர்  ஆர்.சிவபோகம். 1907 ஜூலை 23 அன்று பிறந்தார் சிவபோகம். லேடி வெல்லிங்டன் பள்ளியில் படிப்பு. அப்படியே ராணி மேரி கல்லூரியில் பட்டப் படிப்பு. படுசுட்டியான சிவபோகத்தை ஈர்த்தார் ‘சிஸ்டர்’ சுப்பலட்சுமி. சிவபோகத்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது சுப்பலட்சுமியுடனான நட்புதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick