ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்! | Sanskruti Team make a cloth doll for Guinness record - Aval Vikatan | அவள் விகடன்

ஐ.டி வேலை, பேங்க் வேலையை விட்டுவிட்டு பொம்மை செய்கிறார்கள்!

அழகான சாதனை

கின்னஸ் உலக சாதனைக்காக  ‘சன்ஸ்க்ருதி’ அமைப்பின் பெண்கள் பலர் சேர்ந்து முழுக்க துணியால் செய்த பொம்மைகளை சென்னையில் செப்டம்பர்  8, 9-ம் தேதி களில் காட்சிப்படுத்தவிருக்கின்றனர். ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம் 1,500 பொம்மைகள்! கிருஷ்ணர், ராதை, ஆண்டாள், ரங்கமன்னார், பலவிதமான அலங்காரத்தில் மணப்பெண்கள், மணமக்கள் ஊர்வலம், திருமணக் காட்சி, பரதம், ஒடிசி, கதக், குச்சிபுடி, கதகளி என அனைத்து மாநில நடனமாடும் பெண்கள்... இப்படி வகைக்கு ஒன்றாக பொம்மைகளின் அணிவகுப்பு நீண்டுகொண்டே போகிறது.

சென்னை போரூரைச் சேர்ந்த ரூபா சஞ்சய், ‘சன்ஸ்க்ருதி’ உருவான கதையை விவரிக்கிறார்... ‘`காகிதக் கூழில் பொம்மைகளைச் சுலபமா செய்றதுக்கு நானே ஒரு வழி கண்டுபிடிச்சு, அதை வீடியோ பண்ணி ஃபேஸ்புக்ல போட்டேன். அதை ஏராளமானவர்கள் பார்த்து, ஷேர் பண்ணி, பெரிய குரூப்பே ஃபார்ம் பண்ற அளவுக்கு வந்துடுச்சு. இப்ப அந்த குரூப்ல 2,700 பெண்கள் இணைஞ்சிருக்காங்க. எல்லோரும் அவங்கவங்க தயாரிப்புகளை ஃபேஸ்புக்கில் போட்டாங்க. இது பலருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. அதைத் தாண்டி வெளியுலகத்துக்கும் இதைப் பத்தித் தெரியணும் என்றால், இவங்களுடைய தயாரிப்புகள் எல்லாத்தையும் ஒரு காட்சியாக வைக்கணும்னு நினைச்சோம். அப்போதான் இந்தக் கலையைக் கத்துக்க நினைக்கிறவங்களுக்கும் உபயோகமாக இருக்கும். அதுக்காக ஆரம்பிச்ச அமைப்புதான் ‘சன்ஸ்க்ருதி’ '’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் ரூபா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick