ராசி பலன்கள் | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்

ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செப்டம்பர் 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை

மேஷம்  எதையும் சாதிக்கக்கூடிய  துணிச்சல் வரும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். பிள்ளைகளின் நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சகோதர வகையில் பிணக்குகள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் கையிலிருந்த பொருள்களை யெல்லாம் விற்பீர்கள். கணிசமாக லாபம் உயரும்.

உத்தியோகத்தில்
விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

நினைத்த காரியங்கள் நிறைவேறும் நேரமிது.


ரிஷபம் செயலில் வேகம் கூடும். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடப்பார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். மாமியார், மாமனாரின் அன்பு மழையில் நனைவீர்கள். கணவருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அவர் கோபப்படுவார். அனுசரித்துப் போவது நல்லது. பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick