வெளிச்சத்துக்குத் தடை போடாதீர்கள்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு | Ways to declutter your Sheer Curtains at home - Aval Vikatan | அவள் விகடன்

வெளிச்சத்துக்குத் தடை போடாதீர்கள்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டீ கிளட்டரிங்

த்தனை நாள்களில் உங்கள் வீடுகளின் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து முடித்திருப்பீர்கள். தேவையானவை எவை, தேவையற்றவை எவை என்கிற தெளிவு வந்திருக்கும். விடுபட்டுப் போன சில விஷயங்களைப் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

வீடு வாங்கும்போதும், வாடகைக்குக் குடிவரும்போதும் ஜன்னல்கள் இருக்கின்றனவா எனத் தேடுவார்கள். ஆனால், குடிவந்ததும் அந்த ஜன்னல்களைத் திறந்து வைக்கிறார்களா என்பதுதான் கேள்வி. குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிப்போர்,  `ஜன்னல்களைத் திறந்துவைத்தால் வீட்டுக்குள் தூசு வரும், கொசு வரும், பிரைவசி இல்லை' என்று திறப்பதே இல்லை.

அது ஆரோக்கியமானதே அல்ல. தினமும் குறிப்பிட்ட மணி நேரத்துக்குச் சூரிய வெளிச்சமானது வீட்டுக்குள் வர வேண்டும். வெயில் என்பது இயற்கையான கிருமி நாசினி.  ஜன்னல்களைத் திறக்காமலிருக்கச் சொல்கிற காரணங்களைத் தவிர்க்கத் திரைச்சீலைகள் உதவியாக இருக்கும். ஜன்னல்களைத் திறந்துவைத்து ‘ஷியர் கர்ட்டன்’களைப் பயன் படுத்தலாம். இவை வெளிச்சத்தையும் வீட்டுக்குள் அனுமதிக்கும். அதேநேரம் உங்கள் பிரைவசியும் பாதுகாக்கப்படும். சாதாரண திரைச்சீலைகளும் ஓகே. திரைச்சீலைகள் பயன்படுத்தும்போது பகல் வேளையில் ஜன்னல்களைத் திறந்து வைக்கலாம், இரவில் மூடி வைக்கலாம். பகல் வேளைகளில் வெளியில் வெளிச்சம் அதிகமாகவும் வீட்டுக்குள் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும். எனவே, அக்கம்பக்கத்திலிருந்து யாராவது பார்த்தாலும் அவர்களுக்கு உங்கள் வீட்டுக் காட்சிகள் தெளிவாக இருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick