அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு | Health benefits of Mustard - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

அஞ்சறைப் பெட்டி: நோய்களை அழிக்கும் பேராயுதம் கடுகு

`கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற முதுமொழி நம் செவித்திரையில் பலமுறை விழுந்திருக்கும். அளவில் சிறியதாக இருந்தாலும் கடுகிலுள்ள நலக்கூறுகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கார்ப்பும் கசப்பும் கலந்த சுவைகொண்ட கடுகைச் சமையலுக்கான ஒரு `ஸ்டார்ட்-அப்’ என்று சொல்லலாம். `கடுகில்லாமல் தாளிப்பா’ என்று சொல்லுமளவுக்குச் சமையலில் கடுகின் தாக்கம் அதிகம். அஞ்சறைப் பெட்டி டப்பாவை, `கடுகு டப்பா’ என்று சொல்லுமளவுக்கு அடுப்பங்கரையில் கடுகுக்கு அவ்வளவு சிறப்பு!