இசையே வாழ்வு: தாகிட தாகிட! | Musical Journey of Parur Harini Srivatsa - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

இசையே வாழ்வு: தாகிட தாகிட!

ஹரிணி ஸ்ரீவத்சா

‘`கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம், விருப்பம், வேலை என எல்லாவற்றிலும் இசையே வாழ்வாகக் கிடைத்திருப்பது என் பாக்கியம்’’ என்கிறார் ‘பரூர்’ ஹரிணி ஸ்ரீவத்சா. சென்னை மியூசிக் அகாடமியின் ‘2018 டிசம்பர் இசை விழா’வில் ‘பரூர் பாணி வயலின் இசை’ என்ற தலைப்பில் விளக்கவுரை நிகழ்த்தி, அருணா சாய்ராம் உட்பட பல மூத்த இசைக் கலைஞர்களை வியப்பில் ஆழ்த்தியவர். பாரம்பர்யமிக்க மியூசிக் அகாடமியில் விளக்கவுரை நிகழ்த்திய இளம் இசைக் கலைஞர் என்கிற பெருமைக்குரியவர்.