தெய்வ மனுஷிகள்: ஆரியமாலை | Human Gods Stories - Kathavarayan - Ariyamala - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/03/2019)

தெய்வ மனுஷிகள்: ஆரியமாலை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ப்பாபட்டர் அந்த நாட்டுக்கே ராஜகுரு. பட்டருக்குக் கல்யாணமாகி பதினைஞ்சு வருசமாச்சு. ராச வைத்தியர் குடுத்த மருந்தையெல்லாம் சாப்பாடு கணக்கா முழுங்கி பாத்துட்டா பொஞ்சாதி அன்னத்துளசி. பலன் கிடைக்கலே.  அதனால  அவர் தீராத மனக்கவலையில இருந்தாரு.

குரு இப்படி வருத்தப்பட்டு மனசொடிஞ்சு கிடக்குறாரேன்னு ராஜாவுக்குக் கஷ்டமாப் போச்சு. அந்த நாட்டுக்கு வந்த துறவி ஒருத்தர்கிட்ட விஷயத்தைச் சொல்லி, ‘தீர்வு குடுங்க சாமி’னு கேட்டார் ராஜா. அந்தத் துறவி, ஒரு கல்லெடுத்துக் குடுத்து, ‘இதுக்குப் பேரு சாளகிராமம். இதுல மும்மூர்த்திகளும் இருக்காக. உன் குருநாதன்கிட்டக் குடுத்து பூசை செய்யச் சொல்லு. நல்லது நடக்கும்’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. ராஜா, அப்பாபட்டர்கிட்ட அந்தக் கல்லைக் குடுத்தார். இதுநாள் வரைக்கும் கறையானா மனசை அரிச்சுக்கிட்டிருந்த பிரச்னைக்கு அந்த மும்மூர்த்திகள் கருணையால தீர்வு கிடைச்சுச்சு. அன்னத்துளசி முழுகாம இருந்தா. பத்தாவது மாசம் தேவதை மாதிரி ஒரு பெண் குழந்தையைப் பெத்தெடுத்தா. அவதான் ஆரியமாலை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க