எடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா? | Tips for weight loss - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

எடை குறைப்பு ஏ டு இஸட்: டைமே இல்லையா?

- டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

`டைமே இல்லை...' - இந்த ஒரு சாக்கை எத்தனை விஷயங்களுக்குக் காரணமாகச் சொல்லிச் சமாளிக்கிறோம்?

குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் பார்த்துப் பார்த்துச் சமைத்துக்கொடுப்பார்கள். குழந்தைக்குப் பிடிக்கிற பொட்டேட்டோ ஃப்ரை, சுகர் பேஷன்ட்டான மாமனாருக்கு ஆகாதே என்கிற கவலையில் அவருக்காக இன்னொன்று சமைப்பார்கள். கணவரின் இதயநலனில் அக்கறைகொண்டு அவருக்கு மட்டும் ஆலிவ் எண்ணெயில் சமைப்பார்கள். வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிக்குக்கூட பிடித்தது, பிடிக்காதது அறிந்து செய்வார்கள். ஆனால், தமக்கென வரும்போது, அலட்சியப்படுத்துகிறவர்கள் பெண்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமலிருக்க அவர்கள் சொல்லும் ஒரே காரணம், ‘டைமே இல்லை’ என்பது. டயட் விஷயத்திலும் அவர்களுக்கு இதுவே சாக்கு.

‘என் ஒருத்திக்காகத் தனியா சமைக்க முடியுமா?’ என்று தனக்குப் பொருந்தாதவற்றையும் பிடிக்காதவற்றையும் சாப்பிடுகிறவர்களே பெரும்பான்மை. என்ன கிடைக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதைச் சாப்பிடுவது... பிறகு அதற்காக வருத்தப்படுவது... இதுதான் பலரின் வாழ்க்கையிலும் நடக்கிறது. வாரத்தில் ஒருநாள் சரியான திட்டமிடல் இருந்தாலே அந்த வாரம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க