அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன் | Koteswari kannan shares about her Bharatanatyam experience - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

அக்னி ஆட்டம்: விடாமுயற்சியால் நெருப்பும் நட்பானது! - கோட்டீஸ்வரி கண்ணன்

ரதநாட்டியம் மேல்தட்டு மக்களால் மேல்தட்டு மக்களுக்காக நிகழ்த்தப்படுகிற ஒரு கலை என்கிற எண்ணம் பரவலாக உண்டு. அதை உடைத்துக்காட்டியிருக்கிறார் கோட்டீஸ்வரி கண்ணன். பரதக் கலையைப் பாமரனும் ரசிக்க, கோட்டீஸ்வரி மேற்கொண்ட முயற்சிகள் அசாதாரணமானவை, அசத்தலானவை!

ஹூலா ஹூப் டான்ஸர், நெருப்பு டான்ஸர் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்படுகிறார் கோட்டீஸ்வரி. கால்களில் சலங்கையை மாட்டிவிட்டால் அசாத்திய அவதாரமெடுக்கிறார். அடவு தப்பாமல் அவ்வளவு அழகாக பரதமாடுகிறார். அதுவும் எப்படி? இடுப்பில் பெரிய வளையத்தை மாட்டிக்கொண்டு, அதைச் சுழற்றியபடியே... லேஸர் விளக்குகள் பொருத்திய வளையத்தை மாட்டிக்கொண்டு, அதைச் சுழற்றியபடியே... நெருப்பு பற்றவைத்த வளையத்தை மாட்டிக்கொண்டு, அதைச் சுழற்றியபடியே... தலையில் அடுக்கடுக்காக பானைகளை வைத்துக்கொண்டு, ஆணிகளின் மேல் நின்றபடியே... இப்படி கிட்டத்தட்ட 42 பொருள்களைப் பயன்படுத்தியபடி பரதமாடும் கோட்டீஸ்வரி, பள்ளிப்படிப்பைக்கூட முடிக்காதவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க