எதிர்க்குரல்: அதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? - சூசன் பிரவுன்மில்லர் | American Feminist Journalist Susan Brownmiller - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

எதிர்க்குரல்: அதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? - சூசன் பிரவுன்மில்லர்

`சூசன், நிஜமாகவே நீ அதைப் பற்றிதான் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறாயா?' - அதிர்ச்சியோடும் தீராத ஆதங்கத்தோடும் என்னிடம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி இது. `ரேப்’ என்று சொல்லக்கூட அவர்களுக்கு அப்படியொரு தயக்கம். `ஆம், நான் வன்புணர்ச்சி குறித்துதான் ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன்' என்று சொன்னபோது அவர்கள் அதிர்ச்சி அதிகரித்தது.

`வன்புணர்ச்சியைப்போய் ஆய்வுசெய்வதா?!' என்னும் அவர்களின் அதிர்ச்சியையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. காரணம், அதன் முக்கியத்துவம் அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கும்கூட நீண்டகாலம் புரியாமல்தான் இருந்தது. வன்புணர்ச்சி குறித்து தவறான பல கருத்துகளோடுதான் நான் சுற்றித் திரிந்துகொண்டிருந்தேன். அனுபவம், என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்தது' என்கிறார் அமெரிக்கப் பத்திரிகையாளரும் பெண்ணியவாதியுமான சூசன் பிரவுன்மில்லர்.

1975-ம் ஆண்டு வெளிவந்த சூசனின் Against Our Will: Men, Women and Rape நூல் மிகப் பரவலான ஆதரவையும் கிட்டத்தட்ட சம அளவிலான எதிர்ப்புகளையும் சம்பாதித்துக்கொண்டது. இதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அமெரிக்கப் பத்திரிகையில்தான் முதன்முதலாக வன்புணர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதினார் சூசன். வன்புணர்ச்சிதான் மையம் என்றாலும் அவர் எழுத்தில் ஒரு துளி கண்ணீர் இல்லை; உருக்கம் இல்லை; அதிர்ச்சி இல்லை; இவர்களுக்கு நடந்தது, நாளை எனக்கும் உங்களுக்கும்கூட நடக்கலாம் என்னும் எச்சரிக்கை உணர்வு இல்லை. உணர்ச்சிகளிலிருந்து விலகி நின்று, தன் கட்டுரையை எழுதியிருந்தார் சூசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க