அசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்! - அனுக்ரீத்தி வாஸ் | Miss India Anukreethy Vas exclusive interview - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

அசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்! - அனுக்ரீத்தி வாஸ்

‘`இந்திய மாடல்களுக்கு உலக அரங்கில் எவ்வளவு மதிப்பிருக்கு தெரியுமா?’’ என்று கேட்கிறார் ‘மிஸ் இந்தியா’ அனுக்ரீத்தி வாஸ். சென்ற ஆண்டு நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். மாடலிங் துறை டிமாண்டு செய்யும் சருமத்துக்கான வரையறையை, தன் திராவிட நிறத்தால் மாற்றியெழுதி, பெண்கள் பலரின் தன்னம்பிக்கையை அதிகரித்தவர்.

‘`உலக அழகியாக நான் வாங்கும் ஒவ்வொரு கைதட்டலும் என் அம்மாவுக்குச் சேர வேண்டியது. என்ன கஷ்டம் வந்தாலும் சின்னச் சிரிப்போடு கடந்துபோகும் அவங்க மனவலிமைதான் என் குணமா மாறியிருக்கு. `எங்கம்மா ஒரு சிங்கிள் மதர்' என்பதை நான் கர்வத்தோடு சொல்கிற அளவுக்கு என்னையும் என் தம்பியையும் அவங்க வளர்த்திருக்காங்க. அவங்களுடைய கனவுகளையெல்லாம் எங்க தேவைகளுக்காகத் தொலைச்சிருக்காங்க. சின்ன வயசுல அப்பா என்கிற உறவின்மேல எனக்கும் ஏக்கம் இருந்துச்சு. ‘அப்பா எங்கம்மா?’னு கேட்டா, பாரின்ல இருக்குறதா சொல்வாங்க. கொஞ்சம் வளர்ந்ததும்தான், எங்கப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டாங்க; எங்கம்மா ஒரு சிங்கிள் மதர்னு புரிஞ்சது. ‘ஆண் சம்பாத்தியம் இல்லாத குடும்பம்... என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும்’னு அம்மா எந்த விஷயத்திலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டதே கிடையாது. எங்களுக்கு எல்லாவற்றிலும் `தி பெஸ்ட்'டைக் கொடுப்பாங்க. எங்களுக்கு அப்பா இல்லைன்னே சொல்லமாட்டேன். எங்கம்மாதான் எங்களுக்கு அப்பாவும்’’ - சில நொடிகள் அமைதியாகி மீண்டும் தொடர்கிறார்.