திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா | Miriyam Sushmitha talks about Industrial Photography - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

திறமையை தோற்றத்தின் அடிப்படையிலா பார்க்கப்போறீங்க? - மிரியம் சுஷ்மிதா

வித்தியாசம்

‘`நீங்க போட்டோகிராபரா? இவ்ளோ குண்டா இருக்கீங்க... கேமராவையும் ஸ்டாண்டையும் தூக்கிட்டு போட்டோ எடுக்கக் கிளம்பறீங்களே... எப்படி முடியுது... குள்ளமா இருக்கீங்களே... போட்டோ எடுக்க முடியுமா?

இந்தக் கேள்விகளை எத்தனை முறை எதிர்கொண்டிருப்பேன்னு தெரியலை. என் திறமையைப் பார்க்காம, உருவத்தைவெச்சு என்னை ஏன் எடை போடறாங்கனு தெரியலை. நான் இப்படித்தான். நான் குண்டுதான். குள்ளம்தான். என் உருவம் நான் எடுக்கிற படங்களில் பிரதிபலிக்கப் போறதில்லையே... இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களின் திறமையை தோற்றத்தின் அடிப்படையிலேயே பார்க்கப் போறீங்க?’’

ஆறாத சினத்துடன் ஆரம்பிக்கிறார் மிரியம் சுஷ்மிதா. இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபியில் கலக்கிக்கொண்டிருக்கும் இளம்பெண்... நம்ம சென்னைப் பெண்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க