தேர்தல் வரலாறு: பெண்கள் போராட்டத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி! | Women's suffrage history - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

தேர்தல் வரலாறு: பெண்கள் போராட்டத்துக்குக் கிடைத்த பெரும் வெற்றி!

சுகிதா சாரங்கராஜ்

இது தேர்தல் நேரம். பெண்களைப் பார்த்து பொதுவெளியில் ஆண்கள் கும்பிடுவார்கள். அரசியல் தலைவர்கள் மூதாட்டியை வாரி அணைப்பது, அவர்களோடு புகைப்படம் எடுப்பது, அந்தத் தாய் உச்சிமோந்து தன் மகனைப் போருக்கு அனுப்புவது போல வாழ்த்தி அனுப்புவது என்று விதவிதமான படங்கள் நம் கண்முன்னே வரும். வீதிதோறும் பெண்கள் வேட்பாளர் வருகைக்காகத் தெருவை அடைக்கும் அளவுக்குக் கோலமிட்டு, ஆரத்தி கரைத்து, பூமாலை தொடுத்துக் காத்திருப்பார்கள். இன்னொருபக்கம் கூட்டம் கூட்டமாகப் பெண்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் அழைத்துச் செல்லும். நாள் முழுக்க வெயிலில் காயவைப்பார்கள். பொதுக் கூட்டத்துக்குப் போகும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.200 கொடுக்கப்படும். மதியம் ஒரு பிரியாணி பொட்டலம், ஒரு தண்ணீர் பாக்கெட்... இதுதானே மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தலில் பெண்களின் பங்கு?

சுதந்திர இந்தியாவில் எல்லாத் துறைகளிலும் பெண்கள் பங்கேற்கத் தொடங்கியபோது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14 மற்றும் 15-ல் சம உரிமை, சம ஊதியம் உட்பட பலவற்றில் ஆண்களுக்கு இணையான இடத்தைப் பெண்களுக்கு அளித்துள்ளது. ஆனால், நடைமுறையில் முழுமையாக வழங்கப்படவில்லை.

இந்தியா மட்டுமல்ல... உலக நாடுகளே பெண்களுக்கான உரிமையை வழங்குவதில் இத்தகைய பாரபட்சத்துடன்தான் உள்ளன என்பதைப் பறைசாற்றுகிறது உலகளவில் முன்னெடுக்கப்பட்ட பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் போராட்டம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க