இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ | Singer Bombay Jayashri exclusive interview - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

இசையிலே தொடங்குதம்மா! - தினமும் கற்றுக்கொள்கிறேன்! - பாம்பே ஜெயஸ்ரீ

பார குரல் வளம் மற்றும் ஆழமான இசைத் திறனால் கச்சேரிகளில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் இசை வாணி, பாம்பே ஜெயஸ்ரீ. கர்னாடக இசைப் பாடகியாகப் புகழ்பெற்றவர், திரைப்படப் பின்னணிப் பாடகியாக அனைத்துத் தரப்பு மக்களையும் தன் குரலால் கொள்ளைகொண்டவர். பரபரப்பான சங்கீதப் பணிகளுக்கு இடையே இருந்தாலும், குளுமையான குரலால் இனிமையுடன் வரவேற்று, தன் இசைப் பயணத்தைப் பகிர்ந்துகொண்ட ஜெயஸ்ரீ, 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கச்சேரி செய்திருக்கிறார். தமிழ்க் காவியங்கள், புதுக் கவிதைகள் உட்பட 30 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.