நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா | Geetha talks about her Social service - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

நேசக்காரிகள்: உழைப்பாளிகளுக்காக உழைப்பவர்! - கீதா

ரபரப்பாக இயங்கும் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், ஒரு பழைய கட்டடம். அதன் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு சிறிய அறையில் கணினி முன் உட்கார்ந்து, அரசுத் துறைக்கு மின்னஞ்சல் செய்து கொண்டிருக்கிறார் கீதா.

ஃப்ளாஷ்பேக்... அது 1975-ம் ஆண்டு. டெல்லியிலுள்ள பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த இளம் பெண் கீதா, அன்றைய அரசியல் சூழலில் ஏற்பட்ட உத்வேகத்தில் படிப்பை விட்டு விளிம்புநிலை மக்கள் சேவைக்காக தமிழகம் நோக்கி ஓடிவந்தார்.

சேவைக்குச் சென்ற மகளை பெற்றோர் ஏதும் சொல்லவில்லை. கீதாவின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், மகளின் அக உணர்வைப் புரிந்துகொண்டு வழிவிட்டார்.