வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா | Wardrobes Designs sarees - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

வார்ட்ரோப் ரசனை ஆளுமையை மேம்படுத்தும்! - கௌரி சாஹா

ஓர் ஐடியா உங்களை மாற்றிடுமே!

“என் புடவை பிராண்டு விளம்பரத்துக்கு மாடல்களைப் பயன்படுத்துவதில்லை. என் வாடிக்கையாளர்கள் என்னிடம் வாங்கிய புடவைகளை உடுத்திய புகைப்படங்களையே என் விளம்பரமாகப் பயன்படுத்துகிறேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்கிறார் கௌரி சாஹா. ‘Naksh’ என்ற பெயரில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைத் தொடங்கி, இமயம் முதல் குமரி வரை உள்ள பாரம்பர்யப் புடவை ரகங்களில் தன் கற்பனை வளத்தைக் கலந்து, முற்றிலும் வித்தியாசமான டிசைன்களை உருவாக்கி, பல பெண்களையும் வசீகரித்திருப்பவர். மும்பையில் வசிக்கும் கௌரியிடம் பேசினோம்.

‘`கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்த பின், மும்பை ஐஐடி-யில் மேற்படிப்புக்காகச் சேர்ந்தேன். இது என் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த பல மாணவர்கள் எனக்கு நண்பர்களானார்கள். அவர்களிடமிருந்து பல மாநிலக் கலாசாரங் களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னுள் புதைந்துகிடந்த புகைப்படம் எடுக்கும் ஆர்வம் மற்றும் ஓவியம் தீட்டும் எண்ணத்துக்கும் செயல் வடிவம் கொடுக்க முடிந்தது.