தெய்வ மனுஷிகள் - சயணி | Human Gods Stories - Sayani - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

தெய்வ மனுஷிகள் - சயணி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்னனூர் ராஜா நன்னன் இருக்காரே... தப்புச் செஞ்சு யாராவது மாட்டுனா, உசுரை எடுத்துருவார். எதிரி நாட்டு ஆளுகளே அவர் பேரைச் சொன்னா நடுங்குவாக.

நன்னனூர் செல்வச் செழிப்பான நாடு. எங்கே பாத்தாலும் ஆறும் குளமுமா இருக்கும். எல்லாப் பக்கமும் பச்சை படர்ந்து கெடக்கும். நன்னனூர் ராஜாக்கள் குல மரமா, மாமரத்தை வெச்சிருந்தாக. குறிப்பா, அரண்மனையையொட்டி நதிக்கரையிலிருந்த பழைமையான மாமரத்தை சாமி மாதிரி கும்பிடுவார் ராஜா. போருக்குப் போனாலும் சரி, வீட்டுல நல்லது கெட்டது நடந்தாலும் சரி, அந்த மாமரத்தைத் தொட்டுக் கும்பிட்டுட்டுப் போனாத்தான் வௌங்கும். அந்த மாமரத்துல பழுத்த பழங்களைப் பறிச்சு பூஜையறையில வெச்சிருந்து பிரசாதம் மாதிரி எடுத்துச் சாப்பிடுவாக ராஜா வீட்டு ஆளுக. வேத்தாளுக யாரும் எடுத்து சாப்பிட்டா மரண தண்டனைதான்.

நன்னனூர் ராஜாவுக்குப் படைத் தளபதியா இருந்தவரு கோசர். வீராதி வீரர். அவருக்கு ஒத்தை மவ. பேரு சயணி. அழகின்னா அழகி பேரழகி. அப்பனுக்கு நிகரா கத்தி சண்டை, வாள் சண்டைன்னு யுத்தமும் பழகுனவ.

ஊர் உலகத்துல இல்லாத பேரழகியா இருந்த சயணியைக் கட்டிக்கிட்டுப்போக வரிசைகட்டி நின்னாக. கோசருக்கோ நாடறிஞ்ச ஒரு வீரனுக்குக் கட்டித் தரணும்கிறதுதான் கனவு. அப்படி யொரு மாவீரனைக் கண்டுபிடிச்சாரு கோசரு. பேரு மகிழன். பக்கத்து நாட்டு ராஜாவோட மெய்க்காவல் படைக்குத் தலைவன். அவனைக் கொண்டாந்து நிறுத்தினாரு கோசரு. திடங்கொண்ட தோளோட மன்மதன் மாதிரி வந்து நின்ன மகிழனைப் பாத்து மயங்கிப்போனா சயணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க