அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்! | Mumbai Chenda Melam Sisters - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

அதிரடி அக்கா- தங்கை: இது செண்டை மேளச் சத்தம்!

சோபிதா - ராஹிதா

மும்பையின் பரபரப்பான பகுதியில் உள்ள ஓர் அரங்கம். செண்டை மேளம் தோள்களில் தொங்க, கையில் கோல்களுடன் இசையால் அதிரடித்துக் கொண்டிருந்தார்கள் இரண்டு பெண்கள். வளைக்கரங்களில் ஊற்றெடுத்த ஒலி காற்றில் அதிர்ந்துகொண்டிருக்க, கூட்டம் மொத்தமும் அவர்களைப் பிரமித்துப் பார்த்தபடி இருந்தது. இசை நிகழ்ச்சி முடிந்ததும் அந்தப் பெண்களிடம் பேசினோம். ‘`நாங்கள் இருவரும் அக்கா - தங்கை’’ என்று கூடுதலாக ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து பேச ஆரம்பித்தார்கள் சோபிதாவும் ராஹிதாவும்.

‘`நீங்கள் யூகித்ததுபோலவே, எங்கள் பூர்வீகம் கேரளா. பாலக்காட்டுக்கு அருகே ஒரு சிற்றூரில் பிறந்தோம். இப்போது திருவனந்தபுரத்தில் வசிக்கிறோம். எங்கள் தந்தை கலா மண்டலம் கிருஷ்ணதாஸ், பிரபல செண்டை மேள வித்வான். தனது தனித்துவமான செண்டை வாசிப்பால், கேரள சங்கீத நாடக அகாடமியின் விருதைப் பெற்றவர். திருவனந்தபுரத்தில் உள்ள ‘மார்கி கதகளி பள்ளி’யில் செண்டை மேளத் துறை தலைவராகப் பணிபுரிகிறார். தாய் ஹோம்மேக்கர்.சிறுவயதிலிருந்தே எங்களுக்கும் செண்டை மேளம் கற்றுத்தரும்படி தந்தையிடம் கேட்டோம்.