இதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்! | Osteogenesis imperfecta affected Dhanya Ravi shares about her confidence - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

இதயம் கவர் இரும்பு மனுஷி: என் எலும்புகள் உடையலாம்... நான் ஒருநாளும் உடைய மாடடேன்!

தன்யா ரவி

``என்னை சந்தோஷமா வெச்சுக்க எனக்குத் தெரியும். லேசா மனசு சரியில்லைனா, பாட்டு கேட்பேன். காலையில எழுந்திருக்கிறதுலேருந்து இரவு தூங்கப் போகும்வரை எனக்கு யேசுதாஸ் பாட்டு இருந்தால் போதும், எனர்ஜி தானா வரும். சித்ராம்மாவோட ‘மலர்கள் கேட்டேன்’ பாட்டு என் மனசை அப்படியே வருடிக்கொடுக்கும். மகிழ்ச்சிங்கிறது நம்மகூடவே வளரும் ஒரு விஷயம். மகிழ்ச்சிக்கான காரணங்கள் நமக்குள்ளேயே இருக்கு. அதைக் கண்டுபிடிச்சு சந்தோஷமா இருக்கிறதுதான் நம்ம வேலை...’’  - பெங்களூரில் வசிக்கும் தன்யா ரவி பேச ஆரம்பித்தால் புதிதாகப் பிறந்ததுபோல உணரலாம் யாரும். அவ்வளவு எனர்ஜி... அநியாய தன்னம்பிக்கை!

நடைவண்டி பழகவேண்டிய வயதில், தன்யாவுக்கு வாய்த்ததோ சக்கர நாற்காலி. இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிற சோகம் அது.

யெஸ்... தன்யா, ‘ஆஸ்டியோஜெனிசிஸ் இன்பெர்ஃபெக்டா’ என்கிற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டவர். ‘இந்தியாவின் கிளாஸ்வுமன்’ என இவருக்கோர் அடையாளமுண்டு.

‘`ஒரு பத்திரிகையாளர் என்னைப் பற்றி எழுதினபோது ‘கிளாஸ் வுமன்’னு குறிப்பிட்டிருந்தாங்க. அவங்க அப்படி எழுதினதுக்குப் பிறகு பரவலா எல்லாரும் என்னை கிளாஸ் வுமன்னே அடையாளப்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க’’ - இவர் `கண்ணாடிப் பெண்' ஆனதன் காரணம் அறிந்தால் நமக்கெல்லாம் கண்ணீர் வரும்.

‘`ஆஸ்டியோஜெனிசிஸ் இன்பெர் ஃபெக்டா... சுருக்கமா `ஓஐ'னு சொல்றாங்க. ‘பிரிட்டில் போன் டிசீஸ்’னு அதுக்கு இன்னொரு பெயர் இருக்கு.  மரபியல் கோளாறு காரணமா ஏற்படும் பிரச்னை. பிறக்கும்போதே எனக்கு ஃப்ராக்சர். அதனால ஏற்பட்ட வீக்கம் மறையவே சில நாள்களானதாம். ஃப்ராக்சரைக் கண்டுபிடிச்ச டாக்டர்களால அதற்கான காரணமான ‘ஆஸ்டியோஜெனிசிஸ் இன்பெர்ஃபெக்டா’வைக்  கண்டுபிடிக்க முடியலை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க