ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்! - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள் | Folk artist Gnanambal interview - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

ரஜினி கொடுத்த அஞ்சாயிரம் ரூபாயை மறக்க மாட்டேன்! - கரகாட்டக் கலைஞர் ஞானாம்பாள்

வாழ்க்கை

து ஒரு திருவிழா இரவு. மதுரைப் பக்கத்து கிராமம். மாராப்பு இல்லாத ரவிக்கை, தொப்புள் தெரியக் கட்டிய குட்டைப் பாவாடை, திகட்டும் அலங்காரம், மினுங்கும் ஜிகினா என ஆடிக்கொண்டிருக்கும் அந்தக் கரகாட்டப் பெண்களை, ஆயிரம் கண்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. 10, 20 ரூபாய் நோட்டுகளைக் கொடுப்பதாகச் சொல்லி வரும் சில கைகளின் வன்மமான தீண்டல்களை லாகவமாகத் தவிர்த்தபடி, நிற்காமல் ஆடிக்கொண்டிருந்தன அந்தப் பெண்களின் கால்கள். தவிலும் தாளமும் சற்று ஓய்வெடுத்திருந்த இடைவேளையில், ஓட்டமும் நடையுமாக உடைமாற்றும் கொட்டகைக்குள் விரை கிறார்கள் அவர்கள். அங்கு, உறக்கத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளின் அருகில் அமர்ந்த அவர்களின் தவிப்பும் சோர்வும் ஒருவேளை புரிந்திருந்தால், வயது நாற்பதை ஒட்டிய அந்த ‘இளம்’ குடிமகன் கொட்டகை ஜன்னலைக் கள்ளப்பார்வையுடன் வெறித்திருக்க மாட்டான். சத்தம் பெரிதாக, ‘ஆட்டக்காரிங்கன்னா கொஞ்சம் நீக்குப்போக்காதான் இருக்கணும்’ என்று பேசிய ஊர்ப் பெரியவர்களிடம்(!) போராடத் திராணியற்று, அரை நாள் கூலியுடன் நள்ளிரவிலேயே கண்ணீரும் கம்பலையுமாக மதுரைக்கு பஸ் ஏறியது, அந்த நாட்டுப்புறக் கலைக்குழு.