அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்? | Discuss about Relationship between Siblings - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கும்: உடன்பிறந்தோரிடையே உறவுச் சிக்கல்?

- சித்ரா அரவிந்த்

`ரெண்டு குழந்தைங்க இருந்தா போதும்... வீடே ரெண்டா யிடும்’ என பெற்றோர் சிலர் புலம்புவதைக் கேட்டிருப் போம். குழந்தைகள் இருக்கும் வீடுகள் விடுமுறை நாள்களில் அதகளமாகிவிடும். இதற்குப் பயந்தே, ‘இன்னிக்கும் ஸ்கூல் வெச்சிருக்கக்கூடாதா...’ என்று புலம்பும் பெற்றோரும் இருக் கிறார்கள். நன்றாக விளையாடும் பிள்ளைகள், சில நிமிடங்களில் சண்டைபோட்டு அழுதுகொண்டிருப்பார்கள். ஆரம்பத்தில் இப்படிச் சண்டைபோடும் பிள்ளைகள், எதிர்காலத்தில் திரைப் படங்களில் வருவதுபோல பாசமலர்களாகவே மாறிவிடுவார்கள். சிலருக்கோ, வெறுப்பே தொடர்கதையாகிவிடும். கடைசிவரை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் முறுக்கிக்கொண்டு நிற்பார்கள்.

“நட்பும் ரத்த பந்தமும் சேர்ந்ததே உடன்பிறந்தோர் உறவு. அதுவே பிற்காலத்தில், ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் கடமை. அதை உணர்ந்து, குழந்தைப் பருவத்தில் அவர்களைக் கவனமாக வளர்க்க வேண்டும். முன்பெல்லாம், ஒரே வீட்டில் 10 பிள்ளைகளைக்கூட பக்குவமாக வளர்ந்தார்கள். இன்றைக்கு ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பதே அதிசயமாகிவிட்டது. இரண்டு குழந்தைகளே இருந்தாலும் அவர்கள் பெற்றோரைப் படுத்தும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் பெற்றோர் பலருக்கு அலுவலக அழுத்தத்தைவிட, வீட்டில் பிள்ளைகளால்தான் அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது. சில குடும்பங்களில், குழந்தைகள் அவ்வளவு சமர்த்தாக இருப்பார்கள். எல்லாம் வளர்ப்பு முறையில்தான் இருக்கிறது” என்கிறார் உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க