தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத் | Travel Blogger Lakshmi Sharath share about her travel experience - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

தனியே... தன்னந்தனியே... - இரண்டாம் உலகத்தில் சஞ்சரிக்கலாம்! - லட்சுமி சரத்

`‘பயணங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் அவசியம். ‘ஆண்களுக்குப் பிரச்னையில்லை. நினைச்சா நினைச்ச இடத்துக்குக் கிளம்பிடலாம். பெண்களுக்குத்தான் கமிட்மென்ட்ஸ் அதிகம்’னு சொல்றதெல்லாம் நாமளா உருவாக்கிவெச்சிருக்கிற மனத்தடைகள். வாய்ப்புகளை  நாமதான் உருவாக்கிக்கணும். பயணம் பண்ணாத வாழ்க்கையில் சுவாரஸ்யங்களே இருக்காது. ஒரே இடத்தில், ஒரே சூழலில், ஒரே மாதிரியான வாழ்க்கை எதையும் கத்துக் கொடுக்காது. பயணங்கள்தாம் அறிவை விசாலப்படுத்தும். அனுபவங்களைக் கொடுக்கும்’’ - மெசேஜுடன்தான் பேசவே ஆரம்பிக்கிறார் லட்சுமி சரத். பயண ஆர்வலர், கதைசொல்லி, டிராவல் பிளாகர் என இவருக்குப் பன்முகங்கள் உண்டு. இதுவரை 40-க்கும் மேலான நாடுகளுக்குப் பயணம் செய்து முடித்திருக்கிறார்.

எத்தனை நாடுகளுக்குப் போனாலும் பிறந்து, வளர்ந்த சென்னைதான் எப்போதும் ஸ்பெஷல் என்கிறார், இப்போது பெங்களூரில் வசிக்கிற லட்சுமி.

``கிட்டத்தட்ட 15 வருஷங்கள் மீடியா துறை வேலையில் இருந்தேன். ஸ்கூல் படிக்கும்போதே டிராவல் பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்.என்னுடைய ரெண்டு தாத்தாக்களும் நிறைய டிராவல் பண்ணினவங்க. ரிமோட் ஏரியாக்களுக்கு டிராவல் பண்ணிட்டு வந்த பிறகு அந்த அனுபவங்களையும் அங்கே அவங்க சந்திச்ச விஷயங்களையும் எனக்குச் சொல்வாங்க. அதுதான் டிராவல் மீதான என் ஆர்வத்தை அதிகமாக்கியிருக்கணும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க