தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு? | Women participate Ratio in Indian elections - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

தேர்தலும் பெண்களும்: 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீடு... நிறைவேறா கனவு?

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

‘‘நான் பெண் என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில், பெண்களால் இந்த உலகில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’’ என்கிறார் மலாலா.

தீவிரவாதிகளின் தோட்டாக்களுக்குப் பலியாகி, வாழ்வின் கடைசி நிமிடங்களை அனுபவித்துவிட்டு மீண்டுவந்த பிறகு, ஐ.நா-வில் இப்படித்தான் பேசினார் மலாலா.

அப்படியென்றால், பெண்களின் அரசியல் அதிகாரம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு மசோதா நிறைவேறியதற்குப் பின்னால் வலியுடன்கூடிய ஒரு போராட்ட வரலாறு இருக்கும். ஆனால், ஒரு மசோதா நிறைவேறாததற்குப் பின்னால் அத்தகைய வலியுடனான வரலாறு இருக்கிறதென்றால்,  அது மகளிருக்கான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாதான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க