மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா | Chennai girls shares about travel experience - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

மைனஸ் 8 டிகிரி குளிரில் அந்தக் கண்ணீரின் கதகதப்பு! - மோகனா - சப்ரீனா

உலகம் சுற்றும் தோழிகள்

பெண்கள் உள்ளூரில் அவுட்டிங் செல்வதற்கே ஆயிரத்து எட்டு பிளான்கள் போடவேண்டியிருக்கும். கடைசியில் அது ஃபிளாப் ஆன வரலாறுதான் மிஞ்சும். ஆனால், வருடத்துக்கு நான்கு ஃபாரின் டூர், 10 ஸ்டேட் டூர் என ‘லைஃப் கோல்’ வைத்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறார்கள், சப்ரீனா மற்றும் மோகனா. சென்னையைச் சேர்ந்த தோழிகளான இவர்கள், தங்களின் ‘ஆன் ரோடு அட்வென்ச்சர்’ வாழ்க்கையைப் பகிர்கிறார்கள்!

“நாங்க ரெண்டு பேரும் 11 வருஷமா பெஸ்ட்டீஸ். நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சிக்கு சேர்ந்தப்போ தோழிகள் ஆனோம். எங்க நினைவுகளில் ததும்பத் ததும்ப சேகரிச்சு வெச்சிருக்கிறதெல்லாம் பயண அனுபவங்கள்தாம்’’ என்கிற சப்ரீனாவைத் தொடர்கிறார் மோகனா.