கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்! | Financial awareness for women - Probate - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 18 - குடும்பப் பிரிவினையைத் தடுக்கும் உயில்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்றைக்குப் பல குடும்பங்களில் மிகப் பெரிய பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பது சொத்துதான். சம்பாதிக்கும் காலத்தில் எதிர்காலத்துக்கு வேண்டும் என்று பல இடங்களில் மனைகளையும் வீடுகளையும்,  நகைகளையும் வாங்கிப் போட்டுவிடுகிறார்கள் வீட்டுப் பெரியவர்கள். அவர்கள் உயிருடன் இருக்கும்போது அந்தச் சொத்துகள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை.

வீட்டின் பெரியவர் இறந்தபின், `இந்த சொத்தை இவர் எடுத்துக்கலாம்' என உயில் எதுவும் எழுதிவைக்காமல் போய்ச் சேர்ந்துவிட்டால், அந்தக் குடும்பத்தின் கதி, அதோகதிதான்.

மூன்று நான்கு மகன்கள், தங்கள் வாழ்க்கைத் துணைவிகளுடன் சேர்ந்து, ‘எங்களுக்கு இந்தச் சொத்துதான் வேண்டும்’ என்று சண்டை போடுவார்கள். 'இதுதான்டா நேரம்' என்று மகள்களும் மருமகன்களுடன் சேர்ந்து, ‘எங்களுக்குத் தரவேண்டியதை முதலில் பிரித்துக்கொடுத்துவிட்டு மறுவேலையைப் பாருங்கள்’ என்பார்கள்.