தொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்! | Employee to Employer series - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

தொழிலாளி to முதலாளி - 6: நான்கு ஆசைகள்... மூன்று கோடி வருமானம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

- சகீலா ஃபரூக்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் விழுப்புரத்தில் உள்ள, மண்பாண்ட பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ‘சபானா ஆர்ட் பாட்டரீஸ்’ஸின் உரிமையாளர், சகீலா ஃபரூக்.

நடுத்தரக் குடும்பம். பெற்றோருக்கு ஆறு பிள்ளைகள். இவர்களில் சகீலாவுக்குப் படிப்பைக் காட்டிலும் ஓவியத்தில்தான் ஆர்வம் அதிகம். இந்தப் பெண்ணின் திறமைக்குப் பள்ளி ஓவிய வகுப்பு பெரிதாக உதவியிருக்கிறது. ப்ளஸ் டூ முடித்ததுமே திருமணமாகிறது. கணவரின் ஊரான விருத்தாசலத்தில் அவர் செய்துவந்த பீங்கான் தொழில் நலிவடைய, குடும்பச் சூழல் சிக்கலாகிறது. புதிய தொழில் பயணத்தை நோக்கி, விழுப்புரம் வருகிறார். சுயதொழில் தொடங்கலாம் என வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கிறார்.