80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை! - கெளதமி | 1980s evergreen Heroins - Gautami - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 8: வலிகளால் உணர்கிறேன் வாழ்க்கையை! - கெளதமி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில் கெளதமி.

நடிப்பாலும் நளினத்தாலும் மக்களை மகிழ்வித்தவர், வாழ்க்கையில் எதிர்கொண்ட வலிகள் மிக அதிகம். அவற்றையெல்லாம் தாண்டி, சினிமாவிலும் நிஜத்திலும் வென்றுகாட்டியவர். புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளிலும் சமூக ஆர்வலராகப் பயணிக்கும் நடிகை கெளதமி, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.


16 வயதில் சினிமா!

என் பெற்றோர் மருத்துவர்கள். அவங்க பணிச்சூழல் காரணமா இந்தியாவின் பல மாநிலங்களிலும் வளர்ந்திருக்கேன். நான் இந்தியாவின் குடிமகள். அதனால, `இந்த மாநிலத்தைச் சேர்ந்தவள்’னு சொல்ல எனக்கு விருப்பமில்லை. பாசமான பெற்றோர், அண்ணன், நாலு நாய்க்குட்டிகளைத் தாண்டி, படிப்புதான் என் உலகமா இருந்தது. உலக நிகழ்ச்சிகளைத் தெரிஞ்சுக்க நிறைய புத்தகங்கள் படிப்பேன். வெளியூர் பயணங்கள் அதிகம் போவேன். ஒரு பெண்ணுக்கான நியாயமான உரிமைகளுடன் வளர்ந்தேன். நல்லா படிப்பேன். எம்.பி.ஏ படிக்கணும்னு ஆசைப்பட்டு முதல்கட்டமா, இன்ஜினீயரிங் படிப்பை சந்தோஷமா தொடங்கினேன். அப்போ நான் வருஷத்துக்கு ரெண்டு திரைப்படங்களுக்கு மேல பார்த்தால் பெரிய விஷயம். அந்த 16 வயசுல, `தயாமாயிடு’ங்கிற தெலுங்குப் படத்துல ஒரு கேரக்டர் ரோல்ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, சினிமா பயணம் தொடரும்னு நினைக்கலை.