ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/04/2019)

ராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மேஷம் சவால்களில் வெற்றிபெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உங்களின் முயற்சிக்கு கணவர் பக்கபலமாக இருப்பார். மகனுக்கு அயல்நாட்டில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பு வரும். இங்கிதமான பேச்சால் உறவினர்களைக் கவருவீர்கள். அரசு வகை காரியங்கள் சற்று தாமதமாக முடியும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

புத்திசாலித்தனத்தால் சாதித்துக்காட்டும் நேரமிது!


ரிஷபம் திட்டங்கள் யாவும் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பெரிய பதவியில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவர் உங்களிடம் சில முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மாமியார், நாத்தனார் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புதிய கிளைக்குத் திட்டமிடுவீர்கள்.

உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

தொட்டதெல்லாம் துலங்கும் தித்திப்பான நேரமிது.