ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி | Sylvia-Sandy talks about her family - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

ஸ்டார் ஃபேமிலி: பொண்ணுக்காக நிறைய மாறியிருக்கார்! - சில்வியா சாண்டி

ன் ஏரியா வடசென்னை. இப்போ என் செல்ல மகள், மனைவி, அவங்க அம்மா, அப்பா, தங்கச்சினு எல்லோரும் இருக்கிற ஜாலி கூடு என் வீடு’’ - கலகலவென தொடங்குகிற நடன இயக்குநர் சாண்டி, தன் காதல் மனைவி சில்வியாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். தொடர்ந்து, தானும் சாண்டியும் இணைந்த கதை சொல்கிறார், சில்வியா.

‘`என் தங்கச்சிக்கு இவரை ரொம்பப் பிடிக்கும். அவளுடைய பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பண்றதுக்காக நானும் எங்க அம்மாவும் சாண்டிகிட்ட பேசி அவரைக் கூட்டிட்டு வந்தோம். அவரைப் பார்த்ததும் என் தங்கச்சி சந்தோஷத்துல அழுதுட்டா. அதிலிருந்து அவர் எங்க குடும்பத்துடன் க்ளோஸ் ஆகிட்டார். எனக்கு என்னவோ இவரைப் பிடிக்கவே செய்யாது. ஓவரா ஆட்டிட்யூட் காட்டுற மாதிரி இருக்கும். இவர்கிட்ட பேசவும் மாட்டேன். திடீர்னு ஒரு நாள் என்னைக் காதலிக்கிறதா சொல்லிட்டார். அதுக்கப்புறம் அவர்கிட்ட பேசவே இல்ல. ஆனா, அவர் என் அம்மாகிட்ட நேரடியா என்னைப் பெண் கேட்டுட்டார். வீட்டுல `ஓகே’ சொன்னதுக்கு அப்புறம்தான் நான் இவரை லவ் பண்ணவே ஆரம்பிச்சேன்’’ என்கிறவரின் கரம் சாண்டியைப் பற்ற, அவர் தொடர்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க