கடைக்காரனும் கணவனும் - சிறுகதை | Short Story - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

கடைக்காரனும் கணவனும் - சிறுகதை

கீதா கைலாசம், ஓவியங்கள் : ரமணன்

த்தனையோ காரணங்களுக்காக...
எத்தனையோ விசேஷங்களுக்காக...
சில நேரம் எந்தக் காரணமும் இல்லாமலேயும்...
இப்படி சுதா ஒவ்வொரு தடவையும் எத்தனையோ புடவைக் கடைகள் ஏறியாச்சு, இறங்கியாச்சு.
விதவிதமான புடவைகள் வாங்கிக் கட்டியும் பார்த்தாச்சு.
இன்றைக்குவரை அது எதுவும் குறையலை, மனசுல இருக்கிற ஒரு குறையைத் தவிர.

அது...

வாழ்நாளில் ஒரே ஒரு தடவையாவது அவள் கணவன் தானாகவே அவள் கேட்காமலேயே கடைக்குப் போய் ஒரே ஒரு புடவை, அதுவும் அவளுக்குப் பிடித்த நிறத்தில், பிடித்த துணியில், பிடித்த டிசைனில், ரொம்பவும் விலை மலிவில்லாமல் அவளுக்குத் தெரியாமல் அவளை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் வாங்கித்தர வேண்டும் என்பதுதான். ஆனால், அது நிச்சயமாக நடக்கப் போவதில்லை. அது நிரந்தரக் குறைதான்.

சுதா புதிதாக மாற்றலாகிப் போகப் போகும் வேலைக்காக சில புடவைகள் வாங்கத் தீர்மானித்து, அந்தச் சனிக்கிழமை புடவைக் கடைக்குப் போகிறாள். எப்போதும் அதிக கூட்டம் இல்லாத கடையாகத்தான் பார்த்துப்போவாள். நேராக முதல் மாடி டஸ்ஸர் சில்க் புடவைகள் இருக்கும் கவுன்ட்டருக்குப் போய் ஒவ்வொன்றாகப் பார்த்து, தன் மேலே வைத்துப் பார்த்து, கண்ணாடியில் பார்த்து, இப்படி ரசித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு புதிதாக மூன்று, நான்கு பேர். ஒரு கணவன், ஒரு மனைவி, வயதான அம்மா, ஆறு வயது சிறுவன். இவர்கள் சுதாவின் பக்கத்தில் வந்து அவள் பார்த்துக்கொண்டிருக்கும் புடவைகளைப் பார்க்கிறார்கள்.

சட்டென அந்தக் கணவன், வயதான அம்மா இவர்கள் இருவரும் எதிர் கவுன்ட்டருக்குப் போய்விட, சிறுவன் நடுவில் விளையாடியபடியிருக்க, மனைவி மட்டும் சுதாவின் அருகில். கணவன் அந்தப் பக்கம் வேறு சில துணிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். மனைவி இந்தப் பக்கத்தில் சுதாவைப் போலவே டஸ்ஸர் புடவைகளைப் புரட்டிப்போட்டுப் பார்க்கிறாள். மனைவியின் கண், சுதாவின் கையில் இருக்கும் புடவையை ரசிக்கிறது. எதேச்சையாக சுதா அதைக் கீழே வைக்க, மனைவியின் கை அதை எடுக்கிறது. சுதா, தான் புடவையை முதலில் பார்த்ததால், அதைச் சட்டென தன் பக்கம் இழுக்கிறாள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க