நீங்களும் செய்யலாம் - டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு - கிருஷ்ண பிரபாவதி | How to make Tooty Fruity - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

நீங்களும் செய்யலாம் - டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பு - கிருஷ்ண பிரபாவதி

டூட்டி ஃப்ரூட்டி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே?

கடைகளில் வாங்கும் கேக், பிஸ்கட், பிரெட் மற்றும் இனிப்புகளில் கலர் கலராக... குட்டிக்குட்டித் துண்டுகளாக டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பலரும் அதை ஏதோ வெளிநாட்டுப் பொருள் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பொருள் என்கிற தகவல் அவர்களுக்கு நிச்சயம் வியப்பளிக்கும். ஆமாம்... நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பென்பது பெரிய இயந்திரங்களோ, இடவசதியோ தேவைப்படுகிற வேலையல்ல.

பத்தாவது வரை மட்டுமே படித்திருக்கும் கிருஷ்ண பிரபாவதி, டூட்டி ஃப்ரூட்டி பிசினஸில் கலக்கிக்கொண்டிருக்கிறார். தையற்கலை, குஞ்சம் கட்டுவது, கைவினைப் பொருள்கள் செய்வது எனப் பல வேலைகள் தெரிந்திருந்தாலும் டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பது தனக்கு நிறைவையும் நல்ல லாபத்தையும் தருவதாகச் சொல்கிறார் கிருஷ்ண பிரபாவதி. டூட்டி ஃப்ரூட்டி தயாரிப்பதை பிசினஸாகச் செய்வதில் ஆர்வமுள்ளோருக்கு அதற்கான ஆலோசனைகளையும் வழிகளையும் காட்டுகிறார்.

என்னென்ன தேவை, முதலீடு?

டூட்டி ஃப்ரூட்டி என்பது ஏதோ வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருள் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது பப்பாளியிலிருந்து தயாரிக்கப்படுவது என்று சொன்னால் நம்பமுடியாமல் போகலாம். ஆமாம், அதுதான் உண்மை. பப்பாளி சாப்பிடாதவர்கள்கூட டூட்டி ஃப்ரூட்டியை விரும்பிச் சாப்பிடுவார்கள், அதுவும் பப்பாளியே என்பது தெரியாமல்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க