நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி | Inspirational story of Devi - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

நேசக்காரிகள்: அன்னப்பறவை - தேவி

ருவேளை பசியாறுவதற்காகவே பள்ளிக்கூடம் சென்ற தேவி இப்போது ஓர் ஊருக்கே உணவளித்துக் கொண்டிருக்கிறார்!

சேலம் அருகிலுள்ள அரண்மனைக்காடு கிராமத்தில் பிறந்தவர் தேவி. தன்னுடைய பதினோராவது மாதத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். வறுமையின் பிடியில் குடும்பம் சுழல அதிலிருந்து ஓரளவேனும் தங்களைக் காத்துக்கொள்ள தேவியின் அக்கா படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவுடன் வேலைக்குச் செல்ல, தேவி மட்டும் பள்ளிக்கூடம் சென்றார். கல்வி கற்க வேண்டுமென்கிற ஆசை இரண்டாவதுதான். வீட்டில் ஒருவராவது ஒருவேளை சரியாகச் சாப்பிட வேண்டுமென்ற நப்பாசையில்தான் தேவியைப் பள்ளிக்கூடம் அனுப்பியிருக்கிறார்கள்.