ராசி பலன்கள் | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஜனவரி 22-ம் முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை

மேஷம் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.  அரசாங்க அலுவல்கள் எளிதாக முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வீடு கட்ட வங்கிக்கடன் உதவி கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். கணவரின் குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். புண்ணியஸ்தலங்களுக்குச் செல்வீர்கள்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.

நினைத்தது நிறைவேறும் நேரமிது.