தொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்! | Employee to Employer - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

தொழிலாளி to முதலாளி - 2: கம்ப்யூட்டர் மட்டுமே முதலீடு... இப்போ ரூ.30 கோடி வருமானம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த லேபிள் பிரின்ட்டிங் தொழில் நிறுவனமான `ஆர்.எஸ் மேனுஃபேக்சரிங்’கின் உரிமையாளர், வித்யா.

அப்பாவின் வருமானத்தில் இயங்கும் சராசரி குடும்பம். அவர், நான்கு மகள்களையும் நன்கு படிக்கவைத்தார். கடைக்குட்டி, வித்யா. இன்ஜினீயரிங் முடித்தவர், சென்னையிலுள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார். ஓராண்டுக்குப் பிறகு திருமணமாகிறது. குடும்பச் சூழல் காரணமாக வேலையிலிருந்து விலகுகிறார். சிறுவயதிலிருந்தே தனக்குள் இருக்கும் சுயதொழில் ஆர்வத்துக்குச் செயல்வடிவம் கொடுக்க நினைத்தார் வித்யா.