கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்! | Awareness for women about Share Market - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 15 - கைகொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ங்குச் சந்தை முதலீடு பற்றி நான் கூறிய விஷயங்களைப் படித்துப் பார்த்த வாசகிகள், `மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன' என்று கேட்டு, அடுத்த அத்தியாயத்துக்கு அடியெடுத்துத் தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்காகவும் மியூச்சுவல் ஃபண்டின் அருமை பெருமைகளைச் சொல்லிவிடுகிறேன்! 

டூ இன் ஒன்

பணத்தைச் சேர்த்து வைப்பதில் ரிஸ்க்கே வேண்டாம் என்று நாம் நினைத்தால், பேங்க் எஃப்.டி அல்லது ஆர்.டி-யில் சேமிப்போம். கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் துணிந்தால், நேரடி யாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோம். தனித்தனியான இந்த இரண்டு விஷயங்களையும் ஒருசேர நமக்குத் தருகின்றன மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள். அதாவது, அவை நாம் தரும் பணத்தை நமது ரிஸ்குக்கேற்ற மாதிரி கடன் சந்தையிலும், பங்குச் சந்தையிலும் முதலீடு செய்கின்றன.