சட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள் | Laws favour For Women - Aval Vikatan | அவள் விகடன்
ஓட ஓட விரட்டப்பட்டவள்... ஓடி ஓடி உழைக்கிறேன்! - சௌபர்ணிகா
மனசு முடியும் என்று சொன்னால் உடலும் ஒத்துழைக்கும்! - பர்விந்தர் சாவ்லா

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/01/2019)

சட்டம் பெண் கையில்: பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டங்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி

பெண்கள்மீது காலம் காலமாக நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள், அவளது மனதுக்குள்ளேயே புதைக்கப்பட்டுவந்தன. அவற்றை வெளியில் சொன்னால் தனது நடத்தையை உலகம் கேள்விக்குள்ளாக்கும் என்கிற பயம்தான் அதற்குக் காரணம். இன்று காலம் மாறியுள்ளது. ‘எனக்கு, இது நடந்தது; இவரால் நடந்தது’ எனப் பெண்கள் பலர் தைரியமாகப் பகிர்ந்துகொள்கின்றனர், புகார் அளிக்கின்றனர். இந்தப் புகார்களுக்கான சட்ட நடவடிக்கை, குற்றவாளிக்கான தண்டனைகள் மற்றும் புகார் அளிக்கும் பெண்ணுக்கான சட்டப் பாதுகாப்பு பற்றிய தகவல்களைத் தருகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

எவையெல்லாம் பாலியல் குற்றங்கள்?

பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக அவளை உடலளவிலும் மனதளவிலும் காயப்படுத்தும் அனைத்துமே பாலியல் குற்றங்களே.

ஒரு பெண்ணின் விருப்பமின்றி, அவளின் சம்மதமில்லாமல் வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது, பாலியல் குற்றங்களில் உச்சபட்ச குற்றமாகும். தனக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண், விவரம் அறியாத சிறுமி ஆகியோர் எதிராளிக்கு மறுப்பு தெரிவிக்காமல் சம்மதித்திருந்தாலும் அவர்கள்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் உறவு, பாலியல் வன்கொடுமைக் குற்றமாகவே கருதப்படும்.

ஒரு பெண்ணைக் கேலி பேசுவது, அவள் பின்னால் பாட்டுப் பாடிக்கொண்டு சுற்றுவது, தெரியாமல் நடந்துவிட்டதைப்போல அவளை உரசிக்கொண்டு செல்வது போன்ற அனைத்தும் பாலியல் குற்றங்களே.

நீங்க எப்படி பீல் பண்றீங்க