அவள் அரங்கம்: எல்லாருக்கும் காதல் வரணும்! - குஷ்பு | Khushbu answers for Readers Questions - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

அவள் அரங்கம்: எல்லாருக்கும் காதல் வரணும்! - குஷ்பு

சிறிய வயதிலேயே நடிக்க வந்ததில் வருத்தம் உண்டா?
புஷ்பமேரி, அரவக்குறிச்சி


நான் ரொம்ப நல்லா படிப்பேன்.  படிப்பை முடிக்க முடியலையேங்கிற வருத்தம் இன்னிக்கும் உண்டு. எட்டு வயசுல நடிக்க வந்துட்டேன். ஊர் ஊரா டிராவல் பண்ணலாமேனு ஏர் ஹோஸ்டஸ் ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். என்னுடைய டிராவல் ஆர்வத்துக்குக்கூட அதுதான் அடிப்படையா இருக்கும்னு நினைக்கிறேன்.

காதல் பற்றி உங்கள் எண்ணம்?
ப.தங்கமலர், தேனி


எல்லாருக்கும் காதல் வரணும். அதை அனுபவிக்கணும், தோல்வியடையணும், மறுபடி காதல் வரணும். அப்புறம் செட்டிலாகணும்.

‘தாலி’ குறித்து எழுந்த விமர்சனங்கள் மற்றும் வழக்குகளைச் சந்தித்து வளர்ந்த நீங்கள், பெண்ணிய வாதியாகப் பெண்கள் உலகை எப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் என்ன மாற்றங்கள் வர வேண்டும் இங்கே?
கே.கற்பகம், திருச்சி

தாலி குறித்து நான் எதுவுமே பேசினதில்லை. மாற்றம் என்பது ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும்தான் வரணும். `நீ மாறணும்'னு நான் வெளியிலேருந்து சொல்ல முடியாது. ‘ஏபிங் தி வெஸ்ட்’ (Aping the West)னு சொல்வாங்க. மேற்கத்திய கலாசாரத்தைப் பார்த்துட்டு நாம வளர்ந்துட் டோம்னு சொல்றதைவிட மனரீதியா ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு முன்னேறியிருக்காங்க என்பதுதான் முக்கியம். அதை அந்தந்தப் பெண்தான் முடிவு செய்யணும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க