நீங்கள் விஜய் ரசிகையா, அஜித் ரசிகையா? - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன் | Tips for weight loss - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

நீங்கள் விஜய் ரசிகையா, அஜித் ரசிகையா? - டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடை குறைப்பு - ஏ டு இஸட்

நீங்கள் விஜய் ரசிகையா, அஜித் ரசிகையா?

எடை குறைப்புக்கும் விஜய், அஜித்துக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள்...

என்ன ஆனாலும் சரி,  இந்த முறை எடுத்த எடை குறைப்பு சபதத்தில் பின் வாங்குவதில்லை என முடிவெடுத்துவிட்டீர்களா? வாழ்த்துகள்!

முடிவெடுத்த பிறகு நாள், கிழமையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். இன்றே, இந்தக் கணமே நல்ல நேரம்தான்.

உங்கள் முடிவை அசைத்துப் பார்க்கும் சிறப்பான, தரமான சம்பவங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  வேலையிடத்தில், வீட்டில் எனத் தினம் ஒரு பார்ட்டிக்கு அழைப்பு வரும். திருமண விருந்துகள் காத்திருக்கும். பண்டிகைகள் வரிசைகட்டி நிற்கும். கண்முன்னே உணவுப் படையலை வைத்துக்கொண்டு விலகியிருப்பதென்பது சாதாரண காரியமில்லைதான். நீங்கள் விஜய் ரசிகை என்றால் ‘ஒரு தடவை முடிவு பண்ணிட்டா, என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்கிற டயலாக்கையும், அஜித் ரசிகை என்றால் ‘நெவர், எவர் கிவ் அப்’ என்கிற டயலாக்கையும் உங்களுக்கான மந்திரச்சொற்களாக நினைவில்கொள்ளுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க