அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்! | Health benefits of Nutmeg - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

அஞ்சறைப் பெட்டி - ஜாதிக்காய் - நோய்களை விரட்டும் மாயப் பொருள்!

ட்டுமொத்த உலகையும் வசீகரித்த ஒரு மூலிகை எது என்றால், அது ஜாதிக்காய்தான். ஜாதிக்காயைப் போல ஜாதிபத்திரி என்றொரு மூலிகை உண்டு. இவை இரண்டும் நறுமணமூட்டிகளில் ‘இரட்டைக் குழந்தைகள்’. `ஐந்து திரவியம்’ எனும் மூலிகைத் தொகுப்பில் ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் தவிர்க்க முடியாத உறுப்பினர்களாக இருக்கின்றன.

உணவுகளின்மீது ஜாதிக்காய்ப் பொடியைத் தூவிச் சாப்பிடுவது அக்காலத்தில் உயர்ந்த அந்தஸ்தாகக் கருதப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் ஜாதிக்காய் அறிமுகமானபோது, அங்குள்ள செல்வந்தர்கள் ஜாதிக்காய் மற்றும் ஒரு வெள்ளி உடைப்பானை உணவு அருந்தச் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்வார்களாம்.