டீன்ஏஜ் குழந்தைகளுக்கும் அவர்களின் அம்மாக்களுக்கும்! - டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி | Tips for mothers and Teen age children - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

டீன்ஏஜ் குழந்தைகளுக்கும் அவர்களின் அம்மாக்களுக்கும்! - டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி

உறவுகள்... உணர்வுகள்...

``முதல்நாள் ஸ்கூலுக்குப் போனபோது கொடுத்தனுப்பிய லஞ்ச் பாக்ஸ் திறக்கப்படாமலேயே திரும்பி வந்தது. சாப்பாடு வீணான கோபம் ஒருபக்கம், குழந்தை பசி யோடு இருந்திருப்பாளே என்கிற கோபம் இன்னொரு பக்கம். வழக்கம்போல நான் கத்தினேன்.

‘ஸாரி... இனிமே இப்படி நடக்காது’ எனச் சொன்னாள். அன்னிக்கு என் நிம்மதி போனது தான் மிச்சம். அந்தச் சம்பவத்தால் என் அலுவலக வேலைகளும் பாதிக்கப்பட்டன.

ஒரு வாரத்துக்குப் பிறகு மறுபடியும் அதே சம்பவம்... லஞ்ச் பாக்ஸ் அப்படியே வந்தது. அது எனக்கு ரொம்பவே களைப்பான நாள். கூச்சல்போடக்கூடத் தெம்பில்லை. கத்த வேண்டாம் என  முடிவுசெய்து, அவளைக் கூப்பிட்டு அமைதியாகக் காரணம் கேட்டேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க