காதலால் வாழ்கிறோம்... காதலால் காண்கிறோம்! - குமார் - விஜி | Blind couple talks about their life - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

காதலால் வாழ்கிறோம்... காதலால் காண்கிறோம்! - குமார் - விஜி

குறையொன்றுமில்லை

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண்ணில்லை என்றாலும் காதலுண்டு; வெற்றியுண்டு என்று சாதித்தவர்கள், சென்னையைச் சேர்ந்த குமார் - விஜி தம்பதி.

‘`என்னை வளர்க்கச் சிரமப்பட்ட பெற்றோர், அஞ்சு வயசிலேயே என்னை ஸ்பெஷல் ஸ்கூலில் சேர்த்துட்டாங்க. அங்க ஹாஸ்டலில் இருந்தபடி ப்ளஸ் டூ வரை படிச்சேன். போராட்டத்துடனேயே தொடர்ந்து பி.ஏ படிச்சு, சேல்ஸ் எக்ஸிக் யூட்டிவ்வாக பல நிறுவனங்கள்ல வேலை செய்தேன். ஆனா, அங்கெல்லாம் என் பார்வைக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி புறக்கணிக்கப்பட்டேன். இந்த நிலையில், என்னைப்போலவே  விழிச் சவாலுடைய ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சேன். நண்பர் ஒருத்தர் மூலம் 2012-ம் ஆண்டு விஜியைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். காதலில் விழுந்தேன்” என்று முன்கதை சொல்கிறார், குமார்.