தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், நதியா.
அழகும் அபார நடிப்பும் ஒருங்கே அமைந்த பதுமை, நதியா. தமிழ் சினிமா கனவுக்கன்னிகளில் ஒருவரான இவர், நாயகியாக நடித்தது நான்கு ஆண்டுகள் மட்டுமே. அப்போது தன் துடிப்பான நடிப்பாலும் ஆடை, அலங்கார நளினத்தாலும் மக்களின் மனங்களைக் குத்தகை எடுத்தார். என்றென்றும் இளமைக்கு இவர் இலக்கணம். ரசிகர்களின் அன்பு குறையாத எவர்கிரீன் நாயகி நதியா, தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.