கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்! | Financial awareness for women - pension scheme - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

கடுகு டப்பா டு கரன்ட் அக்கவுன்ட் - 16 - ஓய்வுக்காலத்துக்கு உகந்த அரசுத் திட்டங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ம்மவர்களுக்கு நஷ்டம் என்றால் அலர்ஜிதான். `லாபம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, நஷ்டம் என்பது வரவே கூடாது' என்றுதான் நினைப்பார்கள்.  இதுபோல யோசிக்கும் பெண்களுக்கு நூறு சதவிகிதம் ஏற்றது அரசாங்கம் நடத்தும் திட்டங்கள்தாம். எம்ப்ளாய்ஸ் பிராவிடென்ட் ஃபண்ட் (EPF) மட்டுமல்ல... வாலன்டரி பிராவிடென்ட் ஃபண்ட் (VPF), பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF), நேஷனல் பென்ஷன் ஸ்கீம் (NPS) எனப் பல திட்டங்கள் நமது ரிட்டையர்மென்ட் காலத்தை உத்தேசித்து உருவாக்கித் தரப்பட்டுள்ளவையே.

வாலன்டரி பிராவிடென்ட் ஃபண்ட் (VPF)

எம்ப்ளாய்ஸ் பிராவிடென்ட் ஃபண்ட் திட்டத்தில் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப் படியில் (DA) 12% மட்டுமே சேமிக்க முடியும். இந்த வரையறையைத் தாண்டி 24% அளவுக்குக்கூட வி.பி.எஃப்பில் கூடுதலாகச் சேமிக்கலாம். வங்கி, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் கார்ப்பரேட்கள் வழங்கும் கடன் திட்டங்களில் வரிக்கழிப்புக்குப்பிறகு கிடைக்கும் வட்டி 5.5-7% மட்டுமே. அவற்றில் ரிஸ்க்கும் உண்டு. ஆனால், வி.பி.எஃப் வட்டி விகிதம் 8.55%. வரிச் சலுகையின் காரணத்தால், 30% வரி வரம்பில் இருப்பவர்களுக்கு இது சுமார் 12 சதவிகிதத்துக்குச் சமம். வட்டி விகிதம் அடிக்கடி மாறாது. சம்பளத்திலேயே வி.பி.எஃப் பிடித்தம் செய்யப்படும். அலுவலகத்தில் ஒரே ஒரு லெட்டர் கொடுத்தால் போதும்.  ரிட்டையர்மென்ட்டுக்கான பணம் ஆட்டோமேட்டிக்காகச் சேர்ந்துகொண்டே இருக்கும்.

[X] Close

[X] Close