தெய்வ மனுஷிகள்: பெரியாயி | Human Gods Stories - Periyayi - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

தெய்வ மனுஷிகள்: பெரியாயி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பெரியாயி, அந்தூரு பெரிய வூட்டுப்பொண்ணு. தேவதை மாதிரியிருப்பா. சுத்துப்பட்டு கோயிலெல்லாம் பெரியாயி யோட அப்பன் நிர்வாகத்துலதான் இருந்துச்சு. மேலத்தெருவுல வூடு. ஊருல நடக்கிற நல்லது கெட்டதெல்லாம் பெரியாயியோட அப்பங்காரன் தலைமையிலதான் நடக்கும். பெரியாயி நல்லா நடனமாடுவா. கோயில்ல நடக்கிற விழாக்கள்ல பெரியாயியோட நடனத்தைப் பாக்குறதுக்குன்னே பெருங்கூட்டம் கூடும்.

இதே ஊருல ஒரு வைத்தியன் இருந்தான். அவன்பேரு சிதம்பரம். வீடு கீழத்தெருவுல இருந்துச்சு. மேலத்தெரு ஆளுகளுக்கும் கீழத்தெரு ஆளுகளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. வேலைவெட்டின்னாகூட கீழத்தெரு ஆளுகளைக் கூப்பிட மாட்டாக மேலத்தெரு ஆளுக.

சின்ன வயசுலயே திருவாங்கூர் பக்கம் ஓடிப்போயி அங்கிருந்த காணிக்காரங்க கிட்ட மந்திரம், தந்திரம், வைத்தியமெல்லாம் கத்துக்கிட்டு வந்திருந்தான் சிதம்பரம். வெளியூர்ல இருந்தெல்லாம் வைத்தியம் பாக்க ஆளுக வருவாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க