#நானும்தான் - குறுந்தொடர் - 8 | MeToo campaign: mini series - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/02/2019)

#நானும்தான் - குறுந்தொடர் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்த வீட்டுவசதி வாரிய வளாகத்தில் `ஏ, பி, சி, டி' தொடங்கி `எம்' வரை வரிசையாகக் கட்டடங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் நான்கு மாடிகள். ஒவ்வொரு மாடியிலும் இரண்டு வீடுகள்.

இரண்டாவது சனிக்கிழமை தந்த கூடுதல் விடுமுறையால் காலையில் இருந்தே அசமந்தமாகப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள் ஷைலஜா. புத்தகக் காட்சியில் ஆசையாக வாங்கிப் படிக்க நேரமில்லாமல் போட்ட புத்தகங்கள், தூக்கிக் கொஞ்சப்படாத குழந்தை போல ஏக்கத்துடன் கிடந்தன. ஜாடி ஸ்மீத் எழுதிய `வொய்ட் டீத்' பத்தாவது பக்கத்தில் கவிழ்ந்து படுத்திருந்தது. லண்டனுக்குப்போகிற கனவின் மிச்சம் அந்தப் புத்தகத்தை வாங்கிய ஆவலில் தொக்கிக்கிடந்தது. இன்றைய லண்டனின் பின்னணியில் எழுதப்பட்ட பெஸ்ட் செல்லர் நாவல் அது. லண்டன் கனவு, மெள்ள சாத்தியமாகப் போகிற மகிழ்ச்சியோடு பார்வைக்குத் தெரியாத சோகமும் அவளுக்குள் இருந்தது.

ழக்கமாக இரண்டாவது சனிக்கிழமை களில் கிளினிக் விடுமுறை. மகளைக் குளிப்பாட்டி தலைமுடிக்கு சாம்பிராணி போட்டு ஜன்னல் ஓரத்தில் வெயில்படும் படியாக உட்காரவைத்துவிட்டு, சமையல் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள் நித்யா. குழந்தை செல்வி, ஜன்னல் வழியே சாலையில் நடந்துகொண்டிருப்பவர்களைப் பார்த்தாள். தலை முதல் இடுப்பு வரை கன்னிப் பெண்ணாகவும் இடுப்புக்குக் கீழே பச்சைக்குழந்தையாகவும் இருந்தாள் செல்வி. இரண்டு சொட்டு போலியோ மருந்து கொடுக்காமல் போன கவலை நித்யாவைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது. கிளினிக் வேலையைவிட்டுவிட்டு வேறு என்ன செய்வதெனவும் தெரியவில்லை. பொழுதெல்லாம் மகளைப் பார்த்துக்கொள்ள முடிகிற வேலை. மாலையில் சென்று இரவு எட்டரைக்கெல்லாம் திரும்பிவந்துவிடலாம் என்பதுதான் அதில் இருக்கிற வசதி. டாக்டர் தருகிற தொல்லையைப் பொறுத்துக்கொள் வதும் அதனால்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க