தூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே!

ஓ பாப்பா லாலி

சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்னை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநலப் பிரச்னைகளும் பிரசவித்த தாய்க்க ஏற்படக்கூடும். இவற்றைத் தவிர்க்க, கைக்குழந்தைகளின் இரவு உறக்கத்துக்கு ஆலோசனைகள் சொல்கிறார், மதுரையைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவர் கண்ணன்.

“சில குழந்தைகள், பிறந்து முதல் நான்கு மாதங்கள் வரையில் தூங்குவதற்குச் சிரமப்படுவார்கள். காரணம், பிரசவம்வரை தாயின் கருவறைச் சூழலிலிருந்த குழந்தை அதன் பின்னர் புறஉலகுச் சூழலுக்குப் பழகிக்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்கள். தாயின் வயிற்றுக்குள் பனிக்குடத்தில் இருக்கும் குழந்தை, தன் அம்மா நடக்கும்போது, குனிந்து நிமிரும்போதெல்லாம், பனிக்குடத்தில் தூளி ஆடுவதுபோல, ஆடிக்கொண்டே உறக்கத்தில் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick