புது அம்மாக்கள் கவனத்துக்கு!

ஹெல்த்படம்: ராஜாராம் பொன்னம்பலம்

ஆனந்தப்பிரியா
மகப்பேறு மருத்துவர்


பி
ரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா.

தாய் சாப்பிடும் உணவு

பாலூட்டும் தாய்மார்கள், குறிப்பிட்ட சில உணவு களைச் சாப்பிட்டால் குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அம்மாக்கள் சாப்பிடும் உணவு செரித்த பின்னர், அதன் சத்துகள்தாம் தாய்ப்பாலின் மூலமாகக் குழந்தைக்குச் சென்றடையும் என்பதால், குழந்தையின் செரிமானத்துக் கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பாலூட்டும் பெண்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம். மலக்கட்டுப் பிரச்னையை ஏற்படுத்தும் ஜங்க் ஃபுட்ஸ், பிஸ்கட், பிரெட் போன்ற உணவுகளைப் பிரசவம் முடிந்த முதல் 15 நாள்களுக்குத் தவிர்த்துவிடுவது நல்லது. நிறைய தண்ணீர், பழச்சாறு, சூப் அருந்துவது பால் சுரப்பைச் சீராக வைத்திருக்கும்.

பருத்தி உடை
தளர்வான பருத்தி ஆடைகளே பாலூட்டும் தாய்க்கு நல்லது. வேலைப்பாடுகள்கொண்ட ஆடைகள் குழந்தையைத் தூக்கும்போது, அதன் மென்மையான சருமத்தை உரசிப் பதம்பார்க்கும். ஃபீடிங் நைட்டி, வெளியே செல்லும்போது ஃபீடிங் குர்தி என அணிவது பாலூட்ட வசதியாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick